சிரிய குண்டுத் தாக்குதலில் 39 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி சிறுவர்கள் உட்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் சிக்கியவர்களில் இன்னும் பலரைக் காணவில்லை என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஒவ்வொரு பகுதிகளாகக் கைப்பற்றிவருகின்ற சிரிய இராணுவத்தினர், அடுத்ததாக இட்லிப் மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

ரஷ்ய மற்றும் ஈரானிய படையினரின் ஆதரவுடன் செயற்படும் சிரிய இராணுவம், அண்மைய மாதங்களாக கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Related posts

Leave a Comment