சவுதி வான்வழி தாக்குதல் – 46 கிளச்சியாளர் பலி

ஏமனில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 46 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

துஹாயத், ஜபித், எல் உசேனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. சவுதி அரேபிய கூட்டணி படையினரின் உதவியுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அல் தஹார் மாவட்டத்தில் சில பகுதிகளை ஏமன் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது.

அதேவேளை, அரச அதிபருக்கு ஆதரவான படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கி தாக்குதல் நடத்துகின்றன. இந்த விடயம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா மீது தீராப் பகையை தோற்றுவித்துள்ளது.

இதன் காரணமாக அண்மைக் காலமாக சவுதி அரேபிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment