சவுதி நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் பலி

யேமனில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

யேமன் அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அரசப்படையும் சவுதி அரேபியப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி எனப்படும் கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆதரவாக ஈரான் படை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சாடா மாகாணத்தில் (Saada) டாயான் (Dahyan) என்ற இடத்தில் உள்ள சந்தையில் சவுதி அரேபிய படையினர், நேற்று (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இதில் பேருந்து ஒன்று வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் படுகாயமுற்றனர். மேலும் படுகாயமுற்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment