சர்வதேச கடற்பரப்பில் காணாமற்போன 2 மீன்பிடிப் படகுகளைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்

சர்வதேச கடற்பரப்பில் காணாமற்போன இரண்டு மீன்பிடிப் படகுகளைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை மற்றும் கல்முனை பகுதிகளில் இருந்து கடந்த மாதத்தில் கடலுக்கு சென்ற மீன்பிடிப் படகுகளே காணாமற்போயுள்ளதாக திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்தார்.

குறித்த படகுகளில் 5 மீனவர்கள் பயணித்துள்ளனர்.

படகுகளை கண்டுபிடித்துத் தருமாறு மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வௌிவிவகார அமைச்சுகளுக்கு நேற்று அறிவித்ததாக பத்மசிறி திசேரா குறிப்பிட்டார்.

இதனிடையே, ஒரு நாள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது அனர்த்தத்திற்கு உள்ளாகும் மீனவர்கள் இருக்கும் இடம் தொடர்பில் அறிந்துகொள்ள புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்தார்.

Related posts

Leave a Comment