சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டால் பழைய முறையில் தேர்தல் வராது : பைசர்

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறாத காரணத்தினால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்புக்கள் இல்லையென மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படாததால், சபாநாயகரின் பொறுப்பாக பிரதமர் தலைமையில் இதற்காக குழுவொன்று நிறமிக்கப்பட்டு, இதன் குறைகளைத் தீர்த்து, இரண்டு மாத காலத்திற்குள் அதனை ஜனாதிபதியிடம் கையளித்து, வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் இதனை சட்டமாக்கும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment