சஜின் வாஸினால் தான் இயன் பெய்ஸ்லிட் கஸ்டத்தில் விழுந்தார்!

பாராளுமன்ற சட்டத்தை மீறி இலங்கைக்கு சுற்றுலா சென்றமைக்காக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லிட் 30 நாட்கள் பாராளுமன்ற தடையை எதிர்கொண்டு வருகிறார். அவர் வட அயர்லாந்தின் ஜனநாயகக் கட்சி (DUP) உறுப்பினர் என்பதுடன் அவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகுமாறும் பிரித்தானியாவில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

இயன் பெய்ஸ்லிட் இலங்கை சென்றதை பிரச்சினையாக பேசும் நபர்கள் அவர் அங்கு சென்றதன் பின்னணி பற்றி பேசுவதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இவர் 2013ம் ஆண்டு இரு தடவைகள் தனது குடும்பத்துடன் இலங்கை வந்து அனைத்து சலுகைகளையும் அனுபவித்து சென்றுள்ளார். இதற்கு பிரித்தானிய பாராளுமன்றில் அவர் அனுமதி பெற்றிருக்கவில்லை.

ஈழ ஆதரவாளர்களின் முறைப்பாட்டின் பின்னரே இயன் பெய்ஸ்லிட்டின் விடயம் வௌியில் வந்துள்ளது. ஐநாபேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இவர் வலியுறுத்தி வந்ததாக தெரியவருகிறது. பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கு இயன் பெய்ஸ்லிட் எழுத்து மூலம் இது தொடர்பில் 2014ம் ஆண்டு அறிவித்துள்ளார்.

இயன் பெய்ஸ்லிட் என்பவரை இலங்கைக்கு அழைத்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சலுகைகளையும் செய்து கொடுத்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆவார். இயன் பெய்ஸ்லிட் இலங்கை விஜயத்தின் அனைத்து செலவுகளையும் அப்போயை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதென ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதில் எந்த கருத்தும் தௌிவில்லை.

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தொடர்பில்லை

இயன் பெய்ஸ்லிட்டின் இலங்கை விஜயம் குறித்து அப்போதைய உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸிடம் விசாரணை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர ரகுமான் தெரிவித்தார். எனினும் உயர்ஸ்தானிகரம் தொடர்பு இல்லை என்பதால் கிரிஸ் நோனிஸிடம் வினவமுடியாது.

சஜின் சொன்னதை ஜீ.எல் செய்தார்

இயன் பெய்ஸ்லிட் இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கொழும்பில் இருந்தே செய்யப்பட்டுள்ளன. அதுவும் சஜின்வாஸின் பூரண தலையீட்டில் நடந்துள்ளது. ஜீ.எல் சொன்னது போல இது ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த மற்றுமொரு சம்பவம். ஆனால் ஜீ.எல் பீரிஸுக்கு அதிகம் தெரியாது. உண்மையில் சஜின்வாஸ் கூறியது போல ஜீ.எல். நடந்து கொண்டுள்ளார். காசோலைகளுக்கு கையொப்பமிட்டுள்ளார். அதற்கு மேலான விடயங்கள் ஜீ.எல். பீரிஸுக்கு நினைவில்லை.

சஜின் வாஸ் என் பெகெஜ் போய்

சஜின்வாஸ் இவ்வாறான வேலைகளுக்கு சிறந்தவர் என்பதை அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். மஹிந்தவிற்கு சஜினைவிட விசுவாசி யாரும் இருக்கவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்தையும் செயற்படுத்தியது சஜின். சஜினை பெகெஜ் போய் என்றுதான் சிரந்தி அழைப்பார். ராஜபக்ஷ குடும்பத்திற்கு பந்தம் பிடிப்பதில் இவரை போன்று எவருமில்லை.

மஹிந்தவிற்கு சஜின் வழங்கிய டுபாய் பரிசு Night Life

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தனது பைக்குள் போட்டுக் கொள்ள சஜின்வாஸ் குணவர்த்தன ஒரு இரவை மாத்திரம் பயன்படுத்தியுள்ளார். மஹிந்தவும் சஜினும் முதலில் சந்தித்தது டுபாயில். இதனை ஏற்பாடு செய்தவர் பிரபல கோடீஸ்வரர் ரவி விஜேரத்ன. அப்போது மஹிந்தவிற்கு பரிசு வழங்கி சஜின் சில வார்த்தைகளை கூறியுள்ளார். மஹிந்த நாடு திரும்பும்போது சஜின் அவரின் முழு விசுவாசியாகிவிட்டார்.

அதன்படி சஜின்வாஸின் Wine, Women and Wallet செயற்பாட்டுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது என்றே அவருக்கு நெருங்கியவர்கள் கூறுவர். இறுதியில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சஜின்வாஸின் வலையில் சிக்கிவிட்டார்.

Related posts

Leave a Comment