கோலாகலமாக இடம்பெற்றுவரும் கொழும்பு வீதி உணவுத் திருவிழா : மே 20 வரை பிரதி சனிக்கிழமைகளில்

பிராந்­தி­யத்தின் வீதி உணவு தொடர்­பாக, புதிய பரி­ணாமம் ஒன்றை உரு­வாக்கி அதில் களி­யாட்­டங்­க­ளையும் குதூ­க­லத்­தையும் கலந்து வித்­தி­யா­ச­மான அனு­ப­வத்தை ‘கொழும்பு வீதி உணவுத் திரு­விழா 2017’ பெற்­றுத்­த­ர­வி­ருக்­கி­றது.

இந்த கொழும்பு வீதி உணவுத் திருவிழாவை பெயார்வே ஹொட்டேல் நிறு­வனம் ஏற்­பாடு செய்து அனு­ச­ர­ணை­யையும் வழங்­கு­கி­றது.

இம் மாதம் 18 ஆம் திகதி ஆரம்­ப­மாகி எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி  வரை வரும்  சனிக்­கி­ழ­மைகள் தோறும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை இந்த ‘கொழும்பு வீதி உணவுத் திரு­விழா 2017’   (Colombo Street Food Festival 2017) நடை­பெறவுள்­ளது.

கொழும்பு கோட்­டை­யி­லுள்ள வைத்தியசாலை வீதி,  திரு­விழா களி­யாட்­டங்­க­ளுடன் பல்­வேறு இசை­நி­கழ்ச்­சி­களைக் கொண்­ட­தாக கலை­ஞர்கள் உட்­பட பிர­மு­கர்­க­ளினால் நிறை­ந்து காணப்படுகின்றது.

நாவூறச் செய்யும் அற்­பு­த­மான சுவையின் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு உணவு வகை­களின் ஒன்­று­தி­ரட்­டலே இங்கு பிர­தான அம்­ச­மாக அமைந்­தி­ருக்கும். உணவு வகை­களில் புதிய பரி­ணா­மத்தை அடைந்து கொள்ள வழி­வ­குக்கும் கொழும்பு வீதி உண­வுத்­தி­ரு­விழா சுவை­யி­னதும் கலை­யி­னதும் சங்­க­ம­மாக திகழ்கின்றது.

எலிபன்ட் ஹவுஸ் நிறு­வ­னத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் Ballzy’s Entertainment நிறு­வ­னமும் இணைந்து கொள்­கி­றது. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபை, நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை என்­பன முக்­கிய பங்­கா­ளி­க­ளாக இணைந்து கொள்­கின்­றன.

கொழும்பு வீதி உணவுத் திரு­விழா ஒரு புத்­தம்­பு­திய அனு­ப­வத்­தையும் உணவுத் தோற்­றங்­க­ளையும் பெற்­றுத்­தருவதாக அமைந்துள்ளது.

மேலும் 2 ஆவது சனிக்கிழமையாக இடம்பெற்ற கொழும்பு வீதி உணவுத் திரு­விழாவில் பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினையும் பங்குபற்றுதலையும் வழங்கியிருந்தனர்.

அங்கு கலந்துகொண்ட பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை சந்தோசத்தில் மூழ்கியிருந்ததுடன் ஆடல் மற்றும் பாடல்களில் திளைத்திருந்து தமது கவலைகளை மறைந்து ஆனந்தத்தில் இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளை,  அங்கு வந்திருந்த உணவுப் பிரியர்கள் பல்வேறு வகையான உணவுகளை உண்டு ஆனந்தடைந்திருந்ததுடன் சிறுவர்கள் சிறுமியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *