கொழும்பு ராஜகிரிய தனியார் நிறுவனத்தில் பெண்ணிண் ஆவி!! கதி கலங்கும் ஊழியர்கள்…

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவர் தனது கைகள் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையை சேர்ந்த திருமணமான சிங்கப்புலிஆராச்சிகே தொன் பிரியந்தி குமுதுனி என்ற 45 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மர்மமான மரணம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குவதற்கு கொழும்பு தீடீர் மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஷ்ரப் ரூம் தீர்மானித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு உதவி சட்ட வைத்திய அதிகாரி W.A.C.லக்மாலி மரண விசாரணை ஒன்றை நடத்தியுள்ள நிலையில், அங்கு மேலதிக விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பு தீடீர் மரணவிசாரண அதிகாரி அறிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி வைத்திய அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொரளை பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் ராஜகிரிய புத்கமுவ பிரதேசத்தின் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாக செயற்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் சாட்சியாளர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான 30 வயதுடைய உமேஷ் மதுஷான் பின்வருமாறு சாட்சி வழங்கியிருந்தார்.

“எங்கள் நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானதாகும். உயிரிழந்த பெண் எங்கள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக சேவை செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்த நிறுவனம் புறக்கோட்டையில் நடத்தி செல்லப்பட்ட நிலையில், பின்னர் இந்த நிறுவனம் புத்கமுலவ பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டிற்கு மாற்றப்பட்டது.

இந்த வீட்டில் புதுமையான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. கழிப்பறைக்கு சென்று நீரை அடைத்து விட்டு வந்தாலும், நீர் சத்தம் கேட்கும். வித்தியாசமான பல சத்தங்கள் கேட்கும். மேசை முழுவதும் குப்பையாகவே காணப்படும்.

ஒரு நாள் உயிரிழந்த பெண்ணின் உணவு பொதியில் இருந்த மீன் துண்டு காணாமல் போய்விட்டது. நாம் இது தொடர்பில் வீட்டின் பொறுப்பாளரிடம் அறிவித்தோம். பொறுப்பாளர் கட்டடத்தின் உரிமையாளரிடம் அறிவித்தார். கடந்த 8ஆம் திகதி கடமைக்கு வந்த குறித்த பெண் புலம்புவதற்கு ஆரம்பித்து விட்டார். இது தொடர்பில் பெண்ணின் கணவரிடம் அறிவித்தோம். அவர் அவரை அங்கிருந்து அழைத்து சென்றார்”… என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவரான 49 வயதுடைய எஸ்.ஏ.டீ.ஷாந்த குமார பின்வருமாறு சாட்சி வழங்கியிருந்தார்.

“உயிரிழந்த பெண் எனது மனைவி. நாங்கள் திருமணம் முடித்து 18 வருடங்களாகின்றது. எங்களுக்கு பிள்ளைகள் இல்லை. மனைவி ராஜகிரியவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றார். மனைவியின் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தொலைப்பேசி அழைப்பின் பின்னர் காலை 8.30 மணியளவில் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அவர் சற்று நேரம் உறங்கிவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என கூறினார். நான் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றேன். வீடு திரும்பிய நான் 10.30 மணியவில் உறங்குவதற்கு சென்று விட்டேன். மதியம் 12 மணியளவில் உமேஷ் என்பவர் என்னிடம் 25ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார். அது மனைவி சம்பளம் என குறிப்பிட்டார்.

பின்னர் நான் தொழிலுக்கு சென்றுவிட்டேன். ஒரு மணியளவில் மனைவி எனக்கு தொலைப்பேசியில் அழைப்பேற்படுத்தினார். எனினும் சத்தம் ஒன்றும் வரவில்லை. இதன் பின்னர் நான் வீட்டிற்கு சென்ற போது மனைவி இல்லாமையினால் சமயலறையில் அவரை பார்த்த போது உடல் முழுவதும் இரத்தத்துடன் கீழே விழுந்து கிடந்தார். அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றேன். நான் அவரிடம் பலமுறை வினவினேன் என்ன நடந்ததென அவர் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் எழுதிய கடிதம் ஒன்றை இதன் போது பொலிஸார் நீதிம்னறில் சமர்ப்பித்துள்ளனர்.

“எமது அலுவலகத்தில் விசித்திரமான சில சம்பவங்கள், சத்தங்கள் கேட்கும்.” பௌத்தாலோக்க மாவத்தையில் மர்மமாக பெண் உயிரிழந்தது தொடர்பில் சக ஊழியர்கள் தெரிவிப்பது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *