கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க யோசனை

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க மகா சபைக்கு யோசனை முன்வைத்ததாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கூறியுள்ளார்.

உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகலகம்வீதிய, பொது வர்த்தக கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு மாநகர சபைக்குள் ஒருபோதும் காணாத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

Related posts

Leave a Comment