கொழும்பு – கொச்சின் விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக, கொழும்பு (CMB) மற்றும் இந்தியாவின் கொச்சி (COK) நகருக்கும் இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று (15) முற்பகல் 9.00 மணிக்கு புறப்படவிருந்த UL 165 விமான சேவை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை, குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment