கொழும்பில் 06 மணிநேர மின்வெட்டு!

கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று 6 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மாநகரின் 132 கிலோவோட்மின்சார கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகளே இதற்கு காரணம் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு 03 , கொழும்பு 04 , கொழும்பு 05 கொழும்பு 07, மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நேற்று அமுல்படுத்தப்படவிருந்த மின்சாரத்தடை இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment