கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை (20) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை இரவு 9 மணி தொடக்கம் நாளை மறுதினம் காலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

செட்டியார்தெரு மற்றும் அங்குள்ள குறுக்கு வீதிகளுடன் தொடர்புடைய பகுதிகளுக்கும், கொழும்பு 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, களனி பாலம் தொடக்கம் தெமட்டகொட வரையான பிரதான வீதி மற்றும் அதனை அண்மித்த அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனை தவிர, கொழும்பு புறக்கோட்டைக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment