கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­டம் : ­புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற

நாடு­க­ளுடன் சிறந்த பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­வதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களை தடுக்­க­லா­மெ­னவும் அவ் அமைப்பு மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான  டிலந்த விதா­னகே

இலங்­கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு ஊடு­ரு­வி­யுள்­ள­தா­கவும் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அமெ­ரிக்க புல­னாய்­வுப்­பி­ரிவு  தகவல் வெளி­யிட்­டுள்­ளது. இந்த தக­வலை நாம் சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தெரி­வித்­தி­ருந்தோம்.

பல்­வேறு நாடு­களில் செயற்­பட்­டு­வரும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு மிகவும் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­வ­ரு­வதை நாள்­தோறும் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலைமை எமது நாட்­டிற்­குள்ளும் வரக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே நாம் அடிக்­கடி இவ்­வி­டயம் தொடர்­பாக கூறி­வ­ரு­கின்றோம்.

இந்த நிலைமை மிகவும் பயங்­க­ர­மா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான ஒன்­றாகும். எனவே, அர­சாங்கம் தொடர்ந்தும் இவ்­வி­டயம் குறித்து கருத்­திற்­கொள்­ளாமல் இருக்­கு­மே­யானால், அதன் எதிர் விளை­வு­களை விரைவில் சந்­திக்க நேரிடும்.

இலங்­கையில் வாழ்­கின்ற அப்­பாவி முஸ்­லிம்­களும் இந்த ஐ.எஸ். ஐ. எஸ் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளினால் இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு தள்­ளப்­ப­டு­வார்கள். அது­மாத்­தி­ர­மின்றி நாட்­டி­லுள்ள அனைத்து மக்­களும் மீண்டும் அச்­சத்­துடன் வாழும் ஒரு சூழ­லையே எதிர்­கொள்­ள­வேண்­டி­வரும். எனவே, முற்­போக்கு சிந்­த­னை­யு­டைய முஸ்லிம் மக்கள் எம்­மோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். அதே­போன்று அர­சாங்­கத்தின் பாது­காப்­புப்­பி­ரிவு சர்­வ­தேச நாடு­க­ளுடன் சிறந்த வலை­ய­மைப்­பு­களை உரு­வாக்கி செயற்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை,

இரத்­ம­லானை விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமானம் ஒன்றைக் கடத்திச் சென்று இந்தத் தாக்­கு­தலை மேற்­கொள்ள திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் சிங்­கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்­டுள்­ளது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு இதற்­கான ஏற்­பா­டு­களை கொழும்பில் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அது தொடர்பில் இலங்கை அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக குறித்த சிங்­கள பத்­தி­ரிகை மேலும் தெரி­வித்­துள்­ளது

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதானிகள் தூதரகத்துக்குச்செல்வதை  மட்டுப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  பொதுபலசேனா அமைப்பு கருத்து வௌியிடுகையிலேயே சர்வதேசத்துடன்  இணைந்து ஐ. எஸ் தீவிரவாதத்தை தடுக்க  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என்று  சுட்டிக்காட்டியுள்ளது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *