கேபிள் இல்லாத காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில்!!!

கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட் விரைவில் நடைமுறைக்கு வரும் என ஜேர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள உலகின் மிகப்பெரிய லிப்ட் தயாரிப்பு நிறுவனமானது புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக லிப்ட் ஆனது கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கேபிள் ஏதும் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயக்கும் லிப்டை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இந்த லிப்டானது காந்த சக்தி மூலம் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இது மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பக்கவாட்டில் திரும்பி லிப்டை நகர்த்தி கொண்டு செல்லும். இதன் மூலம் ஒரு கட்டிடத்திலிருந்து அதனை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் செல்ல முடியும்.

புதியதாக வடிவமைக்கப்பட்ட இந்த லிப்ட் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரே நேரத்தில் எத்தனை லிப்ட்களை வேண்டுமானாலும் இந்த காந்த வழித்தடத்தில் இயக்க முடியும். இதன் மூலம் கட்டிடங்களில் லிப்ட்க்கான இடத்தை வடிவமைப்பதை எளிதாக்க முடியும். ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாகும்.

2020 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள கட்டிடத்தில் இந்த லிப்ட் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பயணம் செய்வது சாதாரண லிப்டில் பயணம் செய்வது போல் இருக்கும். பயப்பட தேவையில்லை என்றும் அந்த  நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *