கூரையில் இருந்து விழுந்து இராணுவ வீரர் பலி

பான்கொல்ல இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர் தாங்கி ஒன்றை சுத்தம் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளபோது கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் இராணுவ வீரருக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

காலி தொம்பகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

Leave a Comment