குலோப்பசைட் இராசாயனத்தை நிறுத்தமாறு யாரும் கோரவில்லை என்கிறார் நவீன்

சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவோ குலோப்பசைட் இராசாயனத்தை நிறுத்தமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

எனினும், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தேயிலைச் செடிகளுக்கு தெளிக்கப்படும் குலோப்சைட் எனும் இராசாயனத்தை சுகாதார அமைச்சின் ஊடாகவோ அல்லது தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாகவே ஆய்வினை மேற்கொண்டு இதனை இடைநிறுத்துமாறு என்னிடம் கோரிக்கை வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருந்தோட்ட கைதொழில் அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும் எனவும் நவீன் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 99.9மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு தேயிலை ஆராய்ச்சி நிலை உத்தியோகத்தர்களின் முன்பு உறையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் நவீன் திசாநாயக்க உட்பட தலவகாலை தேயிலை ஆராய்ச்சிநிலையத்தின் தலைவர் கவரம்மான் மற்றும் ஏனய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இதுவரை காலமும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினால் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு மனிதனின் வாழ்க்கைக்கு குலோப்சைட் எனும் இராசாயனம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வினை மேற்கொண்டு எவ்வித அறிக்கையும் எனக்கு சமர்பிக்கபடவில்லை. நான் அமைச்சர் என்ற வகையில் இரு பக்கத்தையும் சற்று தேடிப் பார்க்க வேண்டும். என்னால் ஒரு புறும் மாத்திரம் பார்த்து முடிவெடுக்க முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அபிவிருத்திக்காக பெருமளவிலான நிதி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் இன்று வழங்கபட்டுள்ளது. இதேபோல் கடந்த வருடமும் 40 மில்லியன் ரூபா நீதி ஒதுக்கபட்டது. இந்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் தேயிலை துறையில் அபிவிருத்தி உள்ளடங்கி இருக்கிறது. ஆகையால தான் இந்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு நல்ல அனுபவமுல்ல சேவையாளர்களை, மேலும் இணைத்துக் கொள்ள கொள்ள முயற்சிசெய்து வருகிறேன். தற்பொழுது எமது தேயிலை ஆராய்ச்சி நிலையமானது. 03 பிரதான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. இதற்கு எமது நிறுவனத்தில் குழுவாக செயற்பட்டால் இதற்கான தீர்வைப் பெறமுடியும். அதில் சூழல் என்பதை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். காரணம் 30 – 40 வருடங்களுக்கு முன்பு இருந்த காலநிலை அல்ல தற்பொழுது காணப்படுகிறது. நுவரெலியாவில் தற்பொழுது அதிக வெப்பத்தை உணரகூடியதாக இருக்கிறது. வெப்பமான காலநிலை அதிகமாக காணபடுமானால் தேயிலையின் தரமும் சுவைவும் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு தேயிலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட தொழிலாளர்கள் இருந்தார்கள். தற்பொழுது அது படிபடியாக குறைவடைந்து வருகிறது. தேயிலையின் உற்பத்தி குறித்து நாம் சிந்திக்கவேண்டும். ஏனெனில் தற்பொழுது நல்ல தேயிலைத் தூளைத் தயாரிப்பதற்கு நல்ல கொழுந்து தேவைபடுகிறது. அடுத்த 05வருடத்தில் கிலோகிராம் 400மில்லியன் தேவைபடுகிறது. ஆகையால் தான் நாம் புதிய திட்டத்தினை உறுவாக்க வேண்டும். இந்த தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்த அமைச்சர் இருந்தாலும் சரி எந்த தலைவர் இருந்தாலும் சரி இதனை பாதுகாக்கவேண்டியது எமது கடமை. எனவே தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு எமது நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் வருகை தந்திருக்கிறார்கள். ஆகவே தான் இந்த தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment