குலாப் ஜாமூனுக்காக 8 வருடங்களின் பின் இணையும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்

ராவணன் படம் வௌியாகி சுமார் 8 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் ‘குலாப் ஜாமூன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் 2007–இல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்திருந்தனர்.

குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் `ராவணன்’ என்ற பெயரிலும் இந்தியில் `ராவண்’ என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 2010–இல் வெளிவந்தது.

அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குலாப் ஜாமூன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

Leave a Comment