காபூலில் கல்வி நிலையம் மீது தாக்குதல்: 48 பேர் கொலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 67 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காபூலிலுள்ள கல்வி நிலையமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பரீட்சைக்காக மேலதிக வகுப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment