காபுல் கொலைவெறித் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது

ஆஃப்கனிஸ்தான் தலைநகர் காபுலில், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. குறித்த தினத்தில் நடத்தப்பட்ட 2 வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

இது தங்களின் ‘கமாண்டோ ஆப்ரேஷன்’ என்று இந்த தாக்குதலை அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி நிலையம் ஒன்றில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மாணவர்கள் என்பதுடன், அவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான தேர்வை எதிர்கொள்ள காத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று புலனாய்வுத்துறை சார்ந்த பயிற்சி நிலையம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை கொமாண்டோ தாக்குதல் என குறிப்பிட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறும் ஆப்கன் அதிகாரிகள் வேறு எந்த இழப்புகள் தொடர்பாகவும் தகவல் வௌியிடவில்லை.

அத்துடன், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் செஞ்சிலுவை ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். காபூல் சிறையில் தலிபான் கைதிகளும் ஒரு வரிசையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment