காதலை ஏற்க மறுத்த இளம்பெண் வீதியில் தீயிட்டு கொலை!!!

இந்தியா – ஹைதராபாத்தில்  காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞரால் கொடூரமான முறையில் வீதியில் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராக  பணிபுரிந்த  22 வயது இளம்பெண், அலுவலகத்தில் வேலையை முடித்து மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த  இளைஞர் குறித்தத பெண்ணிடம்  பேசுவதற்காக வண்டியை நிறுத்தி தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென்று மறைத்து வைத்திருந்த கேனை உருவி அதிலிருந்த மண்ணெண்ணையை பெண்ணின் மீது ஊற்றி, எரித்துவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *