காதலர்கள் போல் நட்சத்திர விடுதியொன்றிற்கு சென்ற ஜோடி செய்த செயல்!!

கம்பஹா உணவகமொன்றிற்கும் மற்றும் பியமகவில் அமைந்துள்ள நச்சத்திர விடுதியொன்றிற்கும், நேற்றைய பௌர்ணமி தினத்தில் காதலர்கள் போல் சென்ற கலால் அதிகாரியொருவரும் மற்றும் பெண் அதிகாரி​யொருவரும் மதுபானம் கோரியுள்ள நிலையில் அவர்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.

வியூகம் வகுத்து சென்ற குறித்த இருவரும் , பௌர்ணமி தினத்தில் அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த இரண்டு உணவகங்களுக்கும் எதிராக கலால் ஆணையரிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , அதனடிப்படையில் கலால் ஆணையர் எல்.கே.ஜீ குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் குறித்த உணவகங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *