கரை ஒதுங்கிய சடலம் – கொலையா? தற்கொலையா?

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் தியாவட்டவான் பிரதேசத்தில் ஆற்றுக்கு அருகில் இன்று காலை சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் 55 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதுடன் இவரை எவரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா அல்லது குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment