‘கருவில் இருக்கும் போதே கலைக்க முயற்சி’

20 ஆவது திருத்தத்த சட்டமூல விவாதத்தின் போது புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தையும் இரகசியமாக உட்படுத்தம் அவதானமான நிலை இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முற்படுத்த உள்ளது ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் சட்டமூலம் இல்லை எனவும் அது பெடரல் சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான அடித்தளம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெடரல் குட்டிச் சாத்தானை கருவில் இருக்கும் போதே கலைக்க ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment