கருணாநிதியின் அடக்கத்தலத்துக்கு இன்று சென்ற தளபதி விஜய்!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தமையால் கருணாநிதியின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஜயால் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய் விமான நிலையத்திலிருந்து அண்ணா சதுக்கத்திற்கு சென்றார்.

அங்கு கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related posts

Leave a Comment