கணவவனை வாசலில் நிற்க வைத்து கதவுகளை இழுத்து மூடி விரட்டியடித்த தீபா… நொந்துபோன மாதவன்!

தீபா, தன் கணவர் மாதவன் வீட்டுக்குள் வந்துவிட கூடாது என்று வாசலிலேயே நிற்க வைத்தார். அப்போது தீபா செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த தீபா கணவர் மாதவன், வேறுவழியில்லாமல் காரில் ஏறிப் போனார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் அவருடைய கணவர் மாதவனுக்கும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆரம்பித்த சிலநாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சமீபகாலமாக இருவரும் மோதலில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு தன்னுடைய இல்லத்தில் வைத்து ஆர்கே நகர் தேர்தல் ரத்தானது குறித்து பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய கணவர் மாதவன், தீபாவின் வீட்டுக்கு வந்தார்.

அவர் வந்ததும் அவரை வெளியே போகச் சொல்லி சிலரிடம் தீபா சொல்லி அனுப்பினார். அதனால் மாதவன் செய்தியாளர்கள் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார். செய்தியாளர் கூட்டம் முடிந்ததும், தீபா தன் கணவர் உள்ளே நுழைந்துவிடாதவாறு வீட்டின் அனைத்துக் கதவுகளையும் செய்தியாளர்களின் முன்னிலையிலேயே பூட்டினார். இதைப் பார்த்த மாதவன் சிறிதுநேரம் காத்திருந்து விட்டு, காரில் ஏறி போனார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *