கடவத்தயில் துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு

கடவத்த – கண்டி வீதி, கோனஹேன ஆம்ஸ்ட்ரோங் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடவத்த – கோனஹேன பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த துப்பாக்கிப்பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை.

சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment