கடலுக்கு அடியில் புதைக்கப்படும் இராணுவ டாங்கிகள்?

போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் இராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள்.

ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய இராணுவ டாங்கிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த இராணுவ டாங்கிகள் அனைத்தும் கடலில் மூன்று கி.மீ அழத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனை சுற்றி விரைவில் கடல்பாசி வளரும், கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக இது மாறும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த பழைய இராணுவ டாங்கிகள் அனைத்தும் இஸ்ரேலை நோக்கி கடலுக்கடியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

சிடோன் கடற்கரையின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த காமில் கோஸ்பர், “பாலத்தீன மக்களுக்கு எங்கள் ஆதவரை காட்டுவதற்காக அந்த திசையில் நிறுத்தி இருக்கிறோம்” என்கிறார்.

Related posts

Leave a Comment