ஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்படுகின்றன : சர்வதேச பாதுகாப்பு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

நாம் அன்றாடம் பயன் படுத்தும் இணையவழி சார் பொதுவான இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனசார் தரவுகள் களவாடப்படுகின்றன. என சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளிவந்த விக்கிலீக்ஸ் அமைப்பின் ரகசிய தகவல் கோவைகளுக்கினங்க, அமெரிக்க புலனாய்வுப்பிரிவு உலகிலுள்ள ஒவ்வொரு தனிநபரது செயற்பாடுகளையும் உளவு பார்ப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில்  இணையதள வசதியுடைய செயலிகள் அனைத்து தொடர்பாடல் சாதனங்களிலும் பொறுத்தப்பட்டிருப்பதனால், ஒவ்வொரு தனிநபரது அல்லது நிறுவனங்களினதும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, களவாடப்படும் ரகசிய கோப்புகள், சட்டவிரோத செயற்பாடுகள், மிரட்டல் மற்றும் உயர் மட்ட அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக, தேசிய இணையவழி பாதுகாப்பு மையம் மற்றும் தேசிய குற்றத் தடுப்புப் பிரிவு என்பன இணைந்தளவிலான தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் குறைந்தளவிலான குற்றவாளிகளே பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று சர்வதேச ரீதியில் தீவிரவாத செயற்பாடுகள், பண மோசடிகள், நிறுவன ஆவண திருட்டுகள், தனிநபர்களது தனிப்பட்ட பதிவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சார் அச்சுறுத்தல்களை, ஏற்படுத்துவதற்காக குறித்து மோசடி நபர்கள் தங்கள் மூளைகளை விரோதமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு தனிநபரும் அனுப்புகின்ற தகவல்கள், மின்னஞ்சல்கள், ஒளி வடிவ மற்றும் ஒலிவடிவ தகவல் பரிமாற்றுக்கள் யாவும், பிறிதொரு நபரால் கண்காணிக்கப்படுகிறது. எனும் விடயத்தை கவனத்திற் கொண்டு செயற்படுதல் என்பது மிகவும் முக்கியமான விடயமாகுமென சர்வதேச பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *