ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 126 என்ற விமானத்தில் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment