ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கபிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிலத்தில் கிடந்த சிகரெட் பக்கற்றுகளில் குறித்த தங்கபிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

28 தங்கபிஸ்கட்டுகள் இவ்வாறு சிகரெட் பக்கற்றுகளில் காணப்பட்டுள்ளன.

இவை 3 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடயவை எனவும் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தங்கபிஸ்கட்டுக்கள் அடங்கிய சிகரட் பக்கற்றுகள், குறித்த பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment