ஐதேக ஒருபோதும் நாட்டை காட்டிக் கொடுக்காது – கபீர்

பௌத்த மதத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை இரத்துச் செய்யவோ, நாட்டை பிளவுப்படுத்தவோ ஐக்கிய தேசியக்கட்சி இடமளிக்காது என அந்த கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தம் அவர் கண்டி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்கு இன்று விஜயம் செய்து, மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு மாத்திரமல்ல நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும், ஐக்கிய தேசியக்கட்சியின் பல தலைவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

இதனால், ஐக்கிய தேசியக்கட்சியினர் அனைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் இதே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment