ஐக்கிய அரபு இராச்சியம் மக்களுக்கு எச்சரிக்கை

ஐக்­கிய அரபு இராச்­சி­ய­மா­னது சமூக இணை­யத்­த­ளங்­களில் கட்டார் தொடர்பில் அனு­தா­பத்தை வெளிப்­ப­டுத்தும் கருத்­து­களை வெளி­யி­டு­வ­தற்கு மக்­க­ளுக்குத் தடை விதித்­துள்­ளது.

மேற்­படி தடையை மீறு­ப­வர்கள் 15 வரு­டத்­திற்கு மேற்­பட்ட சிறைத் தண்­ட­னை­யையும் 136,000  அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான தண்டப் பண விதிப்­பையும் எதிர்­கொள்ள நேரிடும் எனவும் அந்­நாட்டு சட்­டத்­த­ர­ணிகள் நாய­கத்தால்  நேற்று புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்ள  அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய அரபு இராச்­சிய சட்­டத்­த­ர­ணிகள் நாயகம் ஹமாத் சயீப் அல் – ஷாம்­ஸியால் வெளி­யி­டப்­பட்­டுள்ள  அந்த அறிக்­கையில், கட்டார் மீதான அனு­தாபம் சட்­டத்தின் பிர­காரம் தண்­ட­னைக்­கு­ரிய இணை­யத்­தள குற்­றச்­செ­ய­லாகும் (சைபர் குற்றம்)  என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக இணை­யத்­த­ளங்­க­ளி­னூ­டாக அல்­லது ஏதா­வது எழுத்து வடிவம்,  காட்சி மற்றும் வாய்­மொழி மூலம்  கட்டார் தொடர்பில் அனு­தாபம் அல்­லது எந்­த­வி­த­மான ஒரு­த­லை­ப்பட்­ச­மான அக்­க­றையை காண்­பிக்கும்  அல்­லது ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் நிலைப்­பாட்­டுக்கு எதிர்ப்பை  வெளிப்­ப­டுத்தும் எவ­ருக்கும் எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அந்த அறிக்­கையில் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­டார்­ தீ­வி­ர­வா­தத்­துக்கு ஆத­ரவு வழங்கி வரு­வ­தாக குற்­றஞ்­சாட்டி அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை சவூதி அரே­பியா, பாஹ்­ரெயின், ஐக்­கிய அரபு இராச்­சியம், எகிப்து, யேமன், லிபியா ஆகிய நாடுகள் கடந்த திங்­கட்­கி­ழமை துண்­டித்­துக்­கொண்­டி­ருந்­தன.

இந்­நி­லையில்  சவூதி வெளி­நாட்டு அமைச்சர் அடெல் அல் ஜுபெயிர் பிரான்ஸின் பாரிஸ் நகரில் வைத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்கம் அறிக்­கையில்,  கட்­டா­ரா­னது ஏனைய வளை­குடா நாடு­க­ளுடன் உற­வு­களை மீள ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முன்னர்  பலஸ்­தீன ஹமாஸ் குழு மற்றும் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு என்­ப­வற்­றுக்கு ஆத­ரவு வழங்­கு­வதை முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ளார்

இது தொடர்பில் ஹமாஸ் அமைப்­பினர்  கூறு­கையில், சவூதி வெளி­நாட்டு அமைச்­சரின் நிபந்­த­னை­யா­னது பலஸ்­தீன மக்­க­ளையும் அரே­பிய மற்றும் இஸ்­லா­மிய நாடு­க­ளையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­து­வ­தா­க­வுள்­ள­தாக  தெரி­வித்­துள்­ளனர்.

அதே­ச­மயம்  இந்த விவ­காரம் தொடர்பில் ஜேர்மனிய வெளி­நாட்டு அமைச்சர் சிக்மர் கப்­றியல்  தெரி­விக்­கையில்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே மத்திய கிழக்கில் பிரச்சினைகளை தூண்டிவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் வளைகுடா பிராந்தியத்தில் ஐக்கியத்துக்கு வலியுறுத்த சவூதி மன்னருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *