எம்.பி.களின் சம்பள உயர்வு என்ற செய்தி பொய்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படுவதாக ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகிய போதிலும், இதுகுறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (06) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியும், நிதியமைச்சரும் இதுகுறித்து உறுதியான தீர்மானத்தில் இருக்கும் நிலையில், இவ்வாறான தீர்மானம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என மரிக்கார் எம்.பி தெரிவித்தார்.

வரிச் சுமை, வாழ்க்கைச் சுமை, கடன் சுமை ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகளும் தமது செலவுகளைக் குறைத்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment