ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விஷேட குழு

மொரகஹகந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பில் அரியத்தருவதற்காக விஷேட குழு ஒன்று அடுத்த வாரம் முதல் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

21 ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பல் விழா மற்றும் ரஜரட்டையையும் மலைநாட்டையும் ஒன்றிணைக்கும் மொரகஹகந்த களுகங்கை சுரங்கக் கால்வாயின் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment