உல்­லாச விடுதி முகா­மை­யாளர் கைது..!

பாட­சாலை மாண­வி­களை அழைத்­து­வரும் ஆசி­ரி­யர்கள், இளை­ஞர்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு அறை வசதி செய்து கொடுத்­த­தாகக் கூறப்­படும் களுத்­துறை நாகொட உல்­லாச விடு­தியின் முகா­மை­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் 20 வயதுடைய நபர்  ஒரு­வரை களுத்­துறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர்.

ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கர்ப்­பி­ணி­யான 15 வயது மாணவி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து மேற்­படி உல்­லாச விடு­தியை பரி­சோ­தனை செய்த களுத்­துறை பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பொலிஸ் பிரிவு பொறுப்­ப­தி­காரி மல்சா துசாரி தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ரணை மேற்­கொண்டு சந்­தேக நபரை கைது செய்­துள்­ளனர்.

மேற்­படி உல்­லாச விடு­தியின் உரி­மை­யாளர் பிர­தே­சத்தை விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ளார்.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *