இலங்கை வருகிறார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இதுசுணோரி ஒனோஜெரா (Itsunori Onodera) எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய விஜயத்தின் போது அவர் 20ம் திகதி இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Related posts

Leave a Comment