இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் போட்டி : சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்றது. இந்த போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சூதாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குறித்த கைதுநடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கையை அறிந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 19 தொலைபேசி, இரண்டு மடிக்கணினிகள், 2 தொலைக்காட்சிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *