இலங்கைக்கும் பங்களா தேஷிற்கும் இடையிலான தொடர்பு குறித்து புதிய திட்டம்

இலங்கை மற்றும் பங்களதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த, கலந்துரையாடல் ஊடான செயற்பாட்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களதேஷ் அமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபாவுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக வியட்நாம் சென்றுள்ள பிரதமர், பங்களதேஷ் அமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபாவை நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.

பங்களதேஷிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு அமைச்சர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

தேயிலை, கடற்றொழில், ஔடதம், கல்வி மற்றும் நிதித்துறைகளின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை வழங்க இலங்கை முன்வர வேண்டும் என பங்களதேஷ் அமைச்சர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமது கிரிக்கெட் துறையை மேம்படுத்த இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் இதன்போது நினைவூட்டியுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் தலைமையிலான இலங்கை தூதுக்குழுவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment