இராணுவ குழுக்களை ஒன்றிணைக்கும் பணி ஆரம்பம்; காணி விடுவிப்பு

இராணுவத்தினர் வடக்கில் இருந்து அகற்றப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள் அகற்றப்படும் போது அதற்கு ஏற்ப அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அக்காணிகள் வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்தார். நடைபெற உள்ள பெரஹரா வைபத்திற்கு கொப்பரா தெங்குப் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு கொப்பராவை வழங்க அவர் விஜயம் செய்தார். ஐந்தரை மெற்றிக் தொன் கொப்பரா இதன் போது அன்பளிப்புச் செய்யப்பட்டது. விஜயபாகு படை அணியினர் இம்முறை அதற்கான கொப்பராக்களை வழங்கியிருந்தனர். அவர் மேலும் தெரிவித்தாவது,

வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது. இராணுவம் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள் ஒதுக்கப்படும் விகிதத்திற்கு ஏற்ப அங்கு நிறந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அவை வழங்கப்படும்.

இராணுவ முகாம் அகற்றப்படும் என யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. இராணுவக் குழுக்கள் மட்டுமே ஒன்றிணைக்கனப்பட்டு வருகின்றன. இராணுவத்தில் புனரமைப்புப் பணிகள் சகல இராணுவங்களாலும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படுவது வழமையாகும். சசல தனிப்பட்ட குழுக்கள் வெவ்வேறு வகையில் கருத்து வெளியிடுகின்றனர்.

Related posts

Leave a Comment