இராஜாங்க அமைச்சரின் வாகன ஓட்டுனர் விளக்கமறியலில்

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ வீட்டிற்கு மது போதையில் சென்று கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிரிஷ்ணனின் வாகன ஓட்டுனரை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மிரிஹான பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (29) அதிகாலை 3 மணியளவில் குறித்த நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்த நோக்கத்திற்காக குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவின் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment