இரட்டைக்கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்திய போதே, நீதிவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6 சந்தேக நபர்களை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் கடந்த 5 ஆம் திகதி இவர்களை ஆஜர்படுத்திய போதே நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்திருந்தார்.

அத்துடன், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற விடுமுறை தினம் என்பதன் காரணமாக இன்றைய தினம் இந்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

மேலும், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்து வந்த தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) திருமணமாகிய அவரது மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த செப்டெம்பர் 11 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *