இரசிகையைத் தாக்கிய தீபிகா படுகோனே

காதலருடன் செல்லும் போது வீடியோ எடுத்த இரசிகையை தீபிகா படுகோனே தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதுடன், பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து கலந்து கொண்டு வருகின்றார்கள்.

மேலும் இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.

இருவரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டிஸ்னிலாண்டுக்குச் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை.

இந்நிலையில் இரசிகை ஒருவர் இவர்களை அடையாளம் கண்டு வீடியோ எடுத்த நிலையிலேயே தீபிகா அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment