இம்ரான் கான் இற்கு வாழ்த்து தெரிவித்த கோட்டாபய

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் இற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று தனது (18) டுவிட்டர் கணக்கு மூலம் பதிவொன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் பிரதமரானது பாகிஸ்தான், தென் ஆசியா மற்றும் முழு உலகத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகும் எனவும் தொழில்முறையை வெற்றி கொள்ள முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளதாகவும் அவர் தனது வாழ்த்து பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment