இன அழிப்பிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: பிரித்தானியா

ரோஹிங்கிய இனத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு காரணமானவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மியன்மாரின் ரோஹிங்கிய முஸ்லீம் இனத்தவர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா. இன்று (திங்கட்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பின்னர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாததென பதில் வெளிவிவகார அமைச்சர் (JUNIOR FOREIGN MINISTER) மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment