இனவாதத்தை கையிலெடுத்தால் கைது செய்யப்படுவர் : அரசாங்கம் எச்சரிக்கை

சமஷ்டி  கோரிக்கையை அரசாங்கம் ஏற்கா விடினும் ஜனநாயகத்தின்பால் நிலைப்பாட்டை தெரிவிக்க களம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இனவாதத்தை கையிலெடுத்து யார் செயற்பட்டாலும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Image result for ராஜித சேனாரத்ன virakesari

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோசமாகவும் பகிரங்கமாகவும் ஞானசார தேரரை போன்று வட மாகாண முதலமைச்சர் விக்ணேஷ்வரன் பேச வில்லை. தலைமறைவாகியுள்ள தேரரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர். அமைச்சர் ஒருவரின்  பாதுகாப்பில் உள்ளதால் தான் அவரை தேடுவதில்  இந்தளவு கடினாமாக உள்ளதா ? என்ற சந்தேகமும் காணப்படுகின்றது என அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல்திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பு கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *