இந்தோனேஷியா பூகம்பம்; பலி எண்ணிக்கை 91

– பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
– ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
– அனர்த்தத்தில் பிறந்த குழந்தைக்கு பூகம்பம் என தாய் பெயர் சூட்டினார்
இந்தோனேஷியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இது வரை 91 பேர் பலியாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிவித்துள்ளது.

A woman walks past debris from a collapsed wall following a strong earthquake in Lendang Bajur Hamlet, Lombok island, indonesia August 6, 2018 in this photo taken by Antara Foto. Antara Foto/Ahmad Subaidi/ via REUTERS

இந்தோனேஷியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான லொம்பொக் தீவில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பமொன்று பதிவாகியிருந்தது. இது அப்பகுதியில் ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் இரண்டாவது பூகம்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், தற்போது வரை 92 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கானோர் கட்டடகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான கட்டடங்கள் முற்றாகவும், பகுதியாகவும் இடிபாடடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, அந்நாட்டு அனர்த்த சீரமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மின்சாரம், தொடர்பாடல் என்பனவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தீவுக்கு மருத்துவ உதவிகள் அடங்கிய கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் கர்ப்பிணி ஒருவரின் பிரசவத்திற்கு தாங்கள் உதவி புரிந்ததாக, இந்தோனேஷிய செஞ்சிலுவை அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது ட்விட்டர் தளத்தில் இது குறித்து அறிவித்துள்ள அச்சங்கம், குறித்த பெண் தனது ஆண் குழந்தைக்கு ‘Gempa’ (பூகம்பம்) என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லொம்பொக் பகுதியில் கடந்த ஜூலை 29 ஆம் திகதி 6.4 ரிச்டர் அளவிலான பூகம்பமொன்று இடம்பெற்றிருந்ததோடு, அதில் 17 பேர் வரை கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment