வாஜ்பாயின் இறுதிக்கிரியை இன்று

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் இறுதிக்கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இறுதிக்கிரியைகள் நடத்தப்படும் ஸ்மிருதி சித்தால் அருகில், இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடல் டெல்லியிலுள்ள அவரது கிருஸ்ண மேனன் இல்லத்திற்கு நேற்றிரவு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பா.ஜ.க.தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதிக்கிரியைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment