இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் அதிரடி மாற்றம்? உற்சாகத்தில் கும்ளே!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் அதிரடி மாற்றம் ஏற்படவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அனில் கும்ளேவை இந்திய அணியின் இயக்குனராக நியமிக்க நிர்வாகிகள் குழு தீர்மானித்துள்ளது. அதனால், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌயாகியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ளே திகழும் கடைசி தொடர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் ஆகும். எதிர்வரும் ஏப்ரல் 14ம் திகதி இந்திய அணியின் இயக்குனராக அவர் பொறுப்பேற்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரவிசாஸ்திரி விட்டுச்சென்ற இயக்குனர் பொறுப்பை கும்ளேவிடம் கொடுத்து விட்டு, இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக்க பிசிசிஐ நிர்வாகிகள் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், இதுவரை பிசிசிஐயிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *