ஆளுநர் எழுத்து மூலம் அறிவித்தால் இராஜினாமா

வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக எழுத்து மூலம் முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலனை செய்யப்படுமென வடமாகாண மகளிர் விவகார,கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தற்கால நிைலமைகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (14) மாலை மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென ஆளுநர் உரையாற்றியமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்ைகயிலேயே மாகாண அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர் தெரிவித்ததாவது, வடமாகாண ஆளுநர், அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

இராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள், எதுவும், முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும், நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்றுகூடவில்லை. ஆனால், டெனிஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சை மீளத்தருமாறு முதலமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன் என்றார்.

Related posts

Leave a Comment