ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா, காட்மோர் ஆற்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று (21) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காட்மோர் தோட்டம், லாட்ஜ்வில் பிரிவைச் சேர்ந்த 69 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment